ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

நீரில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை.

ஆனால், இப்போது நாட்டில் மழைவீழ்ச்சியானது அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய வாய்ப்பு மின்சார சபைக்கு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள நிலக்கரி ஆலைகள் அல்லது டீசல் ஆலைகளை நிறுத்தி வைக்க முடிந்திருப்பது எங்களுக்கு ஒரு நன்மையாகும். அடுத்த திருத்தம் ஏப்ரல் மாதம்தான் முன்மொழியப்பட்டிருந்தது.

ஆனால், அரசாங்கம் முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த கணிப்புகள் மாறிவிட்டதால், இதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

அதன்படி, டிசம்பர் 31ஆம் திகதி எங்களின் இருப்புநிலை அறிக்கை முடிந்த பிறகு, ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

தற்போதைய நிலைமைக்கு அமைய கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. எனினும் நான் அவசரப்பட மாட்டேன். இது தொடர்பான தரவு மற்றும் அந்தத் தகவல்களை மின்சார சபையும் அதிகாரிகளுமே வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin