தபால் தொழிற்சங்கங்க கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க முடியாது

தபால் தொழிற்சங்கங்களின் உள்ளக பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி உள்ளதுடன், தீர்வுகளை முன்வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

தபால்துறைசார் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் ;

நுவரெலியா தபால் நிலையத்தை தனியாருக்கு வழங்குதல் மற்றும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமை என்பனவே இவர்களது பிரதான பிரச்சினையாக காணப்படுகின்றது.

தபால் திணைக்களம் தொடர்ந்து நட்டமடைந்து வரும் நிலையில் இந்த அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தபால்துறைக்கு சமமான சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்குப் பின்னால் இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில், எமது சேவையை ஒத்த சேவையினை வழங்குவதற்கும் வருமானத்தை பெறுவதற்கும் பாரியளவிலான தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன.

தபால் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள் இரண்டும் கொள்கை ரீதியானது. இதற்கு எம்மால் தீர்வு வழங்க முடியாது.

நுவரெலியா தபால் நிலையம் அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கப்படுகின்ற போதும் அதற்கு பதிலாக பிறிதொரு இடம் பெற்றுக்கொடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin