இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் அனைத்தையும் தாக்கப் போவதாக ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது குறி வைக்கப்படும் என அந்தக் குழு குறிப்பிட்டது.
இஸ்ரேலியத் துறைமுகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்துலகக் கப்பல் நிறுவனங்கள் அனைத்துக்கும் எதிராக, அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியத் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் எல்லாக் கப்பல்களும், செங்கடலிலும் அரேபியக் கடலிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக ஹெளதி கிளர்ச்சிக் குழுப் பேச்சாளர் கூறினார்.
காஸாவுக்குத் தேவையான உணவும் மருந்துகளும் கிடைக்காமற்போனால், எல்லா நாட்டுக் கப்பல்களும் தாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செங்கடலில் கடந்த வாரம் 3 கப்பல்களை ஹௌதி கிளர்ச்சிக் குழு தாக்கியது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.