கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக கோட்டை ரயில் நிலையத்தில் சொகுசு ரயிலை பயன்படுத்துமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கான வசதி
அதற்கமய, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வு அறையை ஏற்பாடு செய்யவும் ரயில்வே திணைக்களத்திடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரத்மலானை ரயில் தொழிற்சாலையை அவதானித்த அமைச்சர் பந்துல குணவர்தனயன் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வசதி
அத்துடன், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இலங்கைக்கு வருபவர்களுக்கு ரயிலில் வீடுகளுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் போக்குவரத்துச் செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காக எரிபொருளை ஏற்றிச் செல்லும் ரயில் பாதையை கட்டுநாயக்க விமான நிலையம் வரை நீடிப்பதற்கும், விமான போக்குவரத்து அமைச்சர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடுவதற்காக விமான நிலையத்தில் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.