இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள தகவல்!

அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

“இந்த நேரத்தில், ஒரு நாடாக நாம் தீர்மானிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.

எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வருவதாக அல்லது கையடக்க தொலைபேசி, கார், தொலைக்காட்சி கொண்டு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

அத்தியாவசியமற்றவை தடை
அத்தியாவசிய விடயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அதனால்தான் அத்தியாவசியமற்றவை தடை செய்யப்பட்டன.

இவை தற்காலிகமான விடயங்கள். சில தொழில்கள் பாதிக்கப்படும் என்பதை அறியாமல் இது செய்யப்படவில்லை. ஆனால் இந்த கட்டத்தில் முக்கியமான விடயம், வரையறுக்கப்பட்ட வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதாகும்.

இந்த நிலைமை தீர்க்கப்பட்டவுடன், கட்டுப்பாடுகளை முறையாக அகற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor