முதலாவது MICE Expo
யாழ்ப்பாணத்தில்! நாளை ஆரம்பம்!! அமைச்சர் ஹரின் பங்கேற்பு!!!
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப்
பணியகத்தினால் (Sri Lankan Convention Bureau)
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
முதலாவது MICE Expo ஆனது 2023 நவம்பர் 30 முதல் 2023 டிசம்பர் 03 வரை நடைபெற
ஏற்பாடாகியுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.
விசேடமாகத் தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வட மாகாணத்தை
உகந்த MICE
சுற்றுலாத் தளமாக விளம்பரப்படுத்துவதை இந்நிகழ்ச்சி நோக்காகக் கொண்டுள்ளது.
கடல் மற்றும் வான்வழிசார் தென்னிந்திய இணைப்பு நிலையூடாக இந்திய சுற்றுலாப் பயணிகளைக்
கவர்ந்திழுப்பதற்கு யாழ்ப்பாணம் மிகப் பொருத்தமானதொரு நுழைவாயிலாகக் காணப்படும்.
வணிக மன்றங்கள், B2B
நிகழ்வுகள், வலையமைப்புசார் அமர்வுகள், விசேட இராப் போசன
விருந்துபசாரம் மற்றும் யாழ்ப்பாணத் தை பரீட்சயப்படுத்துவதற்கான சுற்றுலா ஆகியவற்றை
உள்ளடக்கிய ஒரு சிறந்த ஊடாடும் தளமாக யாழ்ப்பாண MICE Expo காணப்படும்.
இந்த மூன்று
நாள் MICE Expo 2023 நிகழ்ச்சியானது வட மாகாணத்தை வணிக நிகழ்வுகள், சந்திப்புகள்,
ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்த தளமாகக்
காட்சிப்படுத்தும்.
தெரிவு செய்யப்பட்ட 40 இற்கும் அதிகமான வாங்குநர்கள் மற்றும் 5 ஊடகவியலாளர்கள் Alliance
விமான சேவையூடாக தென்னிந்தியாவிலிருந்து இன்று நவம்பர் 30ஆம்திகதி வருகை
தந்துள்ளனர்.
நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் வாங்குநர்களை வரவேற்பதற்குத் தேவையான சகல
வசதிகளையும் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். தென்னிந்தியாவிலிருந்து வருகை
தந்த இந்தப் பிரதிநிதிகள் குழுவானது தென்னிந்திய MICE
அமைப்பு (SIMA), இந்தியப் பயண
முகவர்கள் அமைப்பு (TAAI ) இந்தியப் பயண முகவர்கள் சம்மேளனம் (TAFI), இந்தியத்
தொழில்முனைவோர் முகவர்கள் அமைப்பு (ETAA ) மற்றும் தமிழ்நாடு டிரவல் மார்ட் சங்கம் (TTMS)
ஆகிய அமைப்புகளின் பிராந்தியத் தலைவர்களைக் கொண்டிருக்கும்.
வட மாகாண சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களை அதிகபட்சமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கு
யாழ்ப்பாண MICE Expo தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய வாங்குநர்கள் மற்றும் உள்நாட்டு
வாங்குநர்களை இலக்கு வைத்து ஒன்றுக்கு இரண்டு அணுகுமுறை கடைபிடிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியானது உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச வாங்குநர்களிடமிருந்து பெரும்
வரவேற்பைப் பெற்றது.
யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் 2023 நவம்பர் 30ஆம் திகதி இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டுடன் சேர்த்து, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள
முதலாவது MICE Expoவோடு தொடர்புடைய நிகழ்வுகள் இடமபெறும்.
வணிக மன்றமானது திண்ணை ஹோட்டலில் 2023 நவம்பர் 30ஆம் திகதி பி.ப. 4.30 மணிக்கு
நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த MICE சுற்றுலாப் பயணிகள்
மற்றும் தொழில்முறையாளர்களுக்கு இலங்கை சார்பாக ஏற்படுத்திக்கொடுக்க முடிந்த கூட்டிணைவு
மற்றும் வாய்ப்புகளை MICE வணிக கலந்துரையாடல் எதிர்பார்த்துள்ளது.
யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள இந்தியப் பிரதிநிதிகள் பணியகம், இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ள, நிகழ்ச்சியை
நடத்தக்கூடிய வாங்குநர்கள் மற்றும் ஊடகங்கள், உள்ளூர் சுற்றுலாத்துறை அதிகார சபை, உள்ளூர்
சுற்றுலாத்துறை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்திய சுற்றுலாத்துறை அமைப்புகளின்
தலைமைகளின் பங்கேற்புடன் சுற்றுலாத்துறை மற்றும் காணிகள் அமைச்சரின் அனுசரணையின்
கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே ஹோட்டலில் இராப் போசன விருந்துபசாரத்துடன்
இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள் குழுவுக்கு யாழ்ப்பாணத்தின் சமையல்சார்
அனுபவங்களையும் கலாசாரப் பழக்கவழக்கங்களையும் காட்சிப்படுத்தினர்.
Jaffna MICE Expo
வின் தொடக்க விழாவானது 2023 டிசம்
பர் 01ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு நோர்த்
கேட் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக சுற்றுலாத்துறை
மற்றும் காணிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்களும் கௌரவ விருந்தினராக
வட மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யாழ்ப்பாண MICE Expo
வின் பிரதான நிகழ்வான B2B அமர்வுகள், தொடக்க விழாவோடு
ஆரம்பமாகும் என்பதுடன், 6 மணித்தியால கால நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய 45
வாங்குநர்கள் மற்றும், உள்ளூர் விற்பனையாளர்களுக்கு இடையே 2,000இற்கும் மேற்பட்ட
சந்திப்புகளை நடத்த உத்தேசித் துள்ளனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா முகவர்கள்,
ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சியை முன்நின்று நடத்துபவர்கள் போன்ற உள்ளூர் சேவை
வழங்குர்களுக்கு வெளிநாட்டு வாங்குநர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு
வாய்ப்பை யாழ்ப்பாண MICE Expo ஏற்படுத்திக்கொடுப்பதுடன், இலங்கையில் சர்வதேச
நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுவூட்டுவதற்குத் தேவையான
உறுதிப்பாட்டையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
MICE என்பது முழுமையாக அனுபவத் திரட்டலை அடிப்படையாகக் கொண்டது. நிகழ்ச்சியை
நடத்தவிருக்கும் எம்முடைய வாங்குநர்கள் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களுக்கு மறக்க
முடியாத ஒரு அனுபவத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டு, 2023 டிசம்பர் 01ஆம் திகதியன்று
யாழ்ப்பாணக் கடற்கரைத் தீவொன்றில் ஆரவாரமான ஒரு இராப் போசன விருந்துபசாரத்தை
இலங்கை சமவாயப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணப் பரீட்சயப்படுத்தல் சுற்றுலாவானது 2023 டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும்
என்பதோடு, நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்ப்பாண இராச்சியம், கீரிமலை இயற்கை நீரூற்று,
நகுலேஸ்வரம் சிவன் கோவில், சுன்னாகம் சந்தை, கந்தரோடை, மருதனார்மடம் ஆஞ்சநேயர்
கோவில், யாழ்ப்பாணக் கோட்டை, யாழ்ப்பாண பொதுசன நூலகம் மற்றும் ஹெப்பி மார்க்கட் ஆகிய
தளங்களைப் பார்வையிடுவதற்காகக் கூட்டிச் செல்லப்படுவர்.
சுற்றுலாவின் போது, நம்பகமானதொரு
மதியுணவு அனுபவத்தை Fox Resorts Jaffna
வழங்கும். வாங்குநர்களுக்கான விடைபெறல்
சந்திப்புகள் இராப் போசன விருந்துபசாரத்தின் போது Jetwing Jaffnaவில் நடைபெற
ஏற்பாடாகியுள்ளது.
யாழ்ப்பாண MICE Expo
சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான நுழைவு முற்பதிவுகளை
அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
Jetwing Jaffna
ஹோட்டல், திண்ணை ஹோட்டல், நோர்த் கேட்
ஹோட்டல் மற்றும் fox Resort Jaffna ஆகிய ஹோட்டல்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன.
நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் வாங்குநர்கள் மற்றும் ஊடகங்கள் 2023 டிசம்பர் 03ஆம் திகதி Air
Alliance ஊடாக இந்தியாவிற்குத் திரும்பவுள்ளனர்.