திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
நாள் வருமானம் 05 முதல் 10 இலட்சம்
இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள் கிலோவொன்றுக்கு 300முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்காரணமாக ஒரு மீனவரின் நாள் வருமானம் 05 முதல் 10 இலட்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
அதுமட்டுமல்லாது , கிளவால், வளையா, சூரை போன்ற மீன்களும் அதிகளவில் பிடிக்கப்படுவதாகவும், இதன் படி வளையா மீன் 1 கிலோகிராம் 1800 ரூபாய்க்கும், கிளவால் 1 கிலோகிராம் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.