இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அவசர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று (2023.11.27) காலை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம்
இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தியதில் இடைத்தரகர்களுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் 75 லட்சம் ரூபாயை வழங்கியது முன்னதாக தெரியவந்தது.
நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.