இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இலங்கையில் பல பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாசநோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.