பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டுள்ள திடீர் முடிவு!

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று (25-11-2023) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ஐ.ஜி.பி சி.டி விக்ரமரத்ன பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சி.டி விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தனது பதவிக்காலத்தை ஜூன் 26 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு நீடித்திருந்தார்.

பின்னர், ஜூலை 09 அன்று, அவருக்கு மூன்று மாதங்களுக்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அக்டோபர் 13 அன்று மூன்று வார கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, நான்காவது பணி நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor