நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் சூர்யா நடிக்க வந்த பிறகு நடிக்க தெரியவில்லை என்று பல இயக்குனர்கள் அவமான படுத்தியதால் சினிமாவை ஓரம் கட்டிவிட்டு தொழில் தொடங்க திட்டமிட்ட சூர்யா எங்கு அவமான பட்டமோ அங்கே மீண்டும் சாதிக்க வேண்டும் என்று தன்நம்பிக்கையுடன் முயற்சி செய்து சினிமாவில் மீண்டும் வந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
மக்கள் மத்தியில் நடிப்பின் நாயகன் என்ற பெயரை பெற்றவர் நடிகர் சூர்யா.இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் படம் 2022ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு விக்ரம் படத்தில் அதே ஆண்டு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படம் ஆரம்பத்தில் வந்த ஹீரோக்களை எல்லாம் ரைகாரகள் கொண்டாடினர்.
கடைசியாக 10 நிமிடம் வந்த சூர்யா மொத்த படத்தையும் திரும்பி பார்க்க வைத்தார், நடிகர் சூர்யாவை ரோலெக்ஸ் என்ற கொடாத ஆரம்பித்தனர். ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.இந்நிலையில் தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் கதைக்களம் நிகழ்கால சம்பவங்களை வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி படமாக்கப்படுகிறது.இதில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 10 மொழிகளில் வெளியாகும் படம் ஒட்டுமொத்த சினிமாவையே திரும்பி பார்க்கும் விதமாக அமையும் என்று புரமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இதில், சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.’கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள் வெளிநாடுகளில் முடிந்து சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த காட்சிகளை படமாக்குவதற்காக ரோப் கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி அறுந்து விழுந்தது.இதை பார்த்ததும் சக சண்டை பயிற்சியாளர்களும், ஸ்டண்ட் கலைஞர்களும் சத்தம் போட்டதையடுத்து சூர்யா அங்கிருந்து விலகினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடித்து வரும் கங்குவா படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.