“எனது மூச்சு எனது மக்களுக்கானது ” ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் மீது அமைச்சர் டக்ளஸ் பாய்சல்

ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் நாடாளுமன்ற சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல. அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம் கோடுப்பேனேயன்றி சுயலாபம் கருதிய பூகோள அரசியலுக்கு அல்ல என்பதையே நான் வழமையாகக் கூறி வருவதுண்டு.இதனையும் திரிபுபடுத்திய சிலர் பூகோள அரசியலுக்கு நான் எதிரானவன் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள், நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய அண்டைய நாடுகளின் பாதுகாப்பு என்ற வகையில் அவை தொடர்பில் மிக அதீதமான அக்கறை எனக்குண்டு. இவை பூகோள அமைப்பு சார்ந்தவை தொடர்பில் முக்கியமானவை. இந்த அமைப்பில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நானும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தபூகோள அமைப்பில் பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் எனக்குக் கிடைத்திருக்கின்ற அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதிலும் நான் எப்போதும் அவதானமாகவே இருக்கின்றேன். அதற்காக, பூகோள அரசியல் சொல்வதையெல்லாம் கேட்கவோ, செய்யவோவேண்டும் என்பது பொருளல்ல.அந்த அரசியலானது எமது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமல் வெறுமனே இருந்தாலும் நல்லது, அல்லது, பாதிப்புகளை ஏற்படுத்தாமல் உதவினாலும் நல்லது என்பதே எனது நிலைப்பாடாகும்.

பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்த நாம் நாடு இன்று மெல்லென நிமிர்ந்து வருகிறது. தாகமெடுத்த கொக்குக்கு தாம்பாளத்தில் தண்ணீர் வழங்காமல் கூசாக்களில் நீர் இறைத்து தாகம் தீர்க்க எந்த நாடு வந்தாலும் நாம் அதை வரவேற்போம்,. ஆனாலும்,. எமது தேசம், எமது மக்கள், எமது உரிமை, எமது மீள் எழுச்சி,. எமது நாடு, எமது இறமை, எமது அயலுலகம்,இவைகளை எம் நெஞ்சில் நிறுத்தியே சர்வதேச உறவுகளை நாம் இன்னமும் கொண்டிருக்கிறோம்.

எமது அயலுலக உறவுக்கும் எமக்கும் இடையில் சிண்டு முடிந்து விடும் அரசியல் சூழ்ச்சிகளும் இங்கு அரங்கேறி வருகின்றன, ஆனாலும் அந்த கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது.

 

“நாட்டை ஆழ்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கூட்டுப்பொறுப்போடு உழைக்க வாருங்கள் ”

கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரே எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டே கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து கரிசனையோடு உழைத்த வரலாறுகளை எமது மக்கள் அறிவார்கள். ஆகவே கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டை ஆழ்பவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுப்பொறுப்போடு உழைக்க முன் வாருங்கள் ,மக்கள் உங்களுக்கு வாக்களித்தது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல, அல்லது ஊடக்கங்களுக்காக உரத்து கூச்சலிட்டுவிட்டு நாடாளுமன்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துவிட்டு போவதற்காக அல்ல.தென்னிலங்களை அரசியல் சக்திகள் தாம் ஆளும் கட்சியாக வென்றுமக்களுக்கு சேவாயாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

ஆனாலும் சக தமிழ தரப்பினர் பலரும் எதிர்ப்பரசியல் நடத்தி கொக்கரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இத்தகைய சாபாக்கேடுதான் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள்தீராப் பிரச்சினையாக நீடித்து வரவும் காரணமாக இருந்து வருகிறது.
‘கொன்றால் பாவம், திண்றால் போச்சி’ என்ற நிலைப்பாடு, இதர தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“எனது மூச்சு எனது மக்களுக்கானது ”

எனது மக்கள் என்பதே எனது மூச்சு. அந்த வகையில் ஏழு எழுத்துக்களில் தான் எனது மூச்சு இருக்கின்றது. இது எனது மக்களுக்கானது. ஆங்கில மொழியிலே லக்கி செவன் என்பார்கள். அது எமது மக்களுக்கானது.
ஆனால், ஏனைய தமிழ்த் தேசியம் சப்புகின்ற சில அரசியல்வாதிகள் என்னைவிட எமது மக்களுக்கு அரைவாசி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதாவது ஏழரைகளாக இருக்கின்றனர். அதனை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையிலேயே அவர்களது செயற்பாடுகளும் இருந்து வருகின்றன.

 

பொதுவாக அரசியல் என்பது மாறி, மாறியே அமைந்து வருகின்றது. அது எந்த நாடுகள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை.

 

ஆனால், எனது அரசியல் என்பது எனது மக்கள் சார்ந்த நலன்கனை கருதியதாக மட்டுமே இன்னமும் தொடர்கிறது.
இயக்க அரசியல் கட்சிகள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், சுயலாப அரசியல் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும், ஊடகங்கள் சார்ந்த சில ஒட்டுண்ணிகளும் இல்லாதிருந்தால் பிரபாகரனின் மனோ நிலையில் சில மாற்றங்கள் வந்திருக்குமோ? எனவும் சில நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு.

இந்த ஒட்டுண்ணிகள்தான், அவர் ஒட்டகத்தில் வந்து அடிப்பார், தங்க ரதத்தில் வந்து அடிப்பார், யானை மீதேறி வந்து அடிப்பார், பூனை மீதேறி வந்து அடிப்பார் என்றெல்லாம் அந்த காலத்தில் அவரையும் உசுப்பேத்தி, ஒருவித அதீத மாயைக் கற்பனாவாத பிம்பத்தினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இந்த பிம்பத்திலிருந்து இறங்கிவர இயலாத நிலையும் அவருக்கு இருந்திருக்கலாம்.

இத்தகைய அதே ஒட்டுண்ணிக் கூட்டத்தில் எஞ்சிய சில துகள்தான் இன்றும் புனைந்த, பொய்யான என்மீதான இத்தகைய கருத்துக்களை திணித்துக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN