ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

பாகிஸ்தானில், மருத்துவ குணங்கள் உடைய அரிய வகை மீன்களை விற்று, ஒரே இரவில் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில், கராச்சியை ஒட்டிய பகுதியில் இம்பராஹிம் ஹைதரி கிராமம் உள்ளது. அங்கு ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் ஹஜி பலோச், மீனவ தொழிலை பிரதானமாக செய்து வந்தார்.

கடலுக்கு நேற்று சென்ற இவர் மற்றும் நண்பர்கள், அரிய வகையான ‘சோவா’ மீன்களை பிடித்து வந்தனர். சோவா மீனுக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளதை அறிந்த கிராம மக்கள் அவற்றை போட்டிப் போட்டு வாங்கினர்.

மொத்தம் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள இந்த மீன்கள், ஒன்றரை மீட்டர் வரை வளரம் திறன் உடையது. அதேவேளை கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரைகளில், குறிப்பாக இனப்பெருக்க நேரத்தில் இந்த மீன்கள் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் அரிய வகை மீன்களை விற்றதில் ஹஜிக்கு 7 கோடி ரூபாய் வரை கிடைத்தது. மேலும் மீன்கள் விற்ற தொகையை மீன்கள் எடுத்து வந்த ஹஜி உள்ளிட்ட தொழிலாளர்கள் ஏழு பேர் சமமாக பிரித்து எடுத்துக் கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor