கணைய புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் பித்தப்பைக்கு அருகில் வயிற்று குழியில் இருக்கும் ஓர் முக்கிய உறுப்பு.

இது செரிமான சாறுகள், இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்கள் என இராசயனங்கள் சுரக்கும் உறுப்பு ஆகும். கணையத்தில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய் உருவாகிறது

​​கணைய புற்றுநோயின் வகைகள்

​எக்ஸோகிரைன் கட்டிகள்
கணைய புற்றுநோய் கட்டிகளில் 90% அதிகமானவை எக்ஸோகிரைன் கட்டிகள். கணைய புற்றுநோயின் பொதுவான அடினோக்கார்சினோமா. இது உறுப்புகளை வரிசைப்படுத்தும் செல்களில் தொடங்குகிறது.

நியூரோ எண்டோகிரைன் கட்டிகள்
கணையக்கட்டிகளில் 10% குறைவானவை நியூரோஎண்டோகிரைன் கட்டிகள். ஐலெட் கார்சினோமா என்பது இதன் மற்றொரு பெயர்.​​

கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

கணையத்தில் கட்டிகள் வந்தால் ஆரம்ப கட்டத்தில் இத்தகைய அறிகுறிகள் தென்படலாம்.

​மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பது கண்கள் மற்றும் தோலின் மஞ்சள் நிறத்தை கொண்டுள்ள நிலை. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோருக்கு முதன்மை அறிகுறிகளில் மஞ்சள் காமாலை முதல் அறிகுறியாக இருக்கும்.

Recommended For You

About the Author: webeditor