சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா
சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில
15.10.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை தினமும் மாலை 4.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் 18.10.2023 வியாழக்கிழமை கும்பபூஜை மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் க. கைலநாதன் அவர்கள் ” வல்லமை தாராயோ ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும் சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.