மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ் மாவட்டத்திற்கு (21)ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் நிகழ்வு
இந்நிலையில் இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ் மத்திய நாகவிகாரைக்கும்,நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்து வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின் மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன பொலிஸார் ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.