மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் : சபா குகதாஸ்

மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்  சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை பாரிய அளவில் பாதிக்கும் காரணம் மின் கட்டண உயர்வு வெறுமனே வீட்டுப் பாவனை மின்சார கட்டணத்துடன் முடிவதில்லை மின்சாரத்தை வலுவாக கொண்டு இயங்கும் தொழில் நிலையங்கள் யாவும்
வாடிக்கையாளர்களின் கட்டண அறவீட்டை அதிகரிக்கும் நிலை உருவாகும் உதாரணமாக அரைக்கும் ஆலைகளில் கட்டணங்கள் உயர்வடையும் இதனால் சாதாரண அன்றாடம் காச்சிகள் மேலும் வருமை நிலைக்கு தள்ளப்படுவர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பதற்கு முன்பாக முதலாம் கட்டம் பல வரிகள் கட்டணங்கள் அதிகரித்தன பின்னர் நாணய நிதியத்தின் முதல் கட்ட நிதி கிடைத்ததும் இரண்டாம் கட்ட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன தற்போது இரண்டாம் கட்ட நிதி கிடைப்பதற்கு முன்பாக மூன்றாம் கட்ட வரிகள் கட்டணங்கள் அதிகரித்துள்ள.

 

எதிர் காலத்தில் எத்தனை தடவை கடன் பெறப்போகிறார்களே அதற்கு மேலாக வரிகளும் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

 

நாட்டின் வருமான மார்க்கங்கள் வீழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ச்சியான கடன் பெறுகையும் உள் நாட்டு கட்டண மற்றும் வரிகளின் அதிகரிப்புக்கள் ஒரு போதும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டெழ வழி திறக்கப் போவதில்லை அத்தோடு மக்களின் வருமானத்தில் முன்னேற்றங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்வாதார சுமைகளை அதிகரிப்பதால் நாட்டில் வருமை நிலையே மேலும் தலை தூக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN