கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை சிறப்பிக்கும் நடைபவனி இன்று 10 .10 .2023 காலை 6 45 மணிக்கு நல்லூர் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள நல்லை ஆதீன வாயிலில் ஆரம்பமாகியது.
ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி நடைபவனியைத் தொடக்கி வைத்தார்.
முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம் இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலயம் பிரதம குரு சிவஸ்ரீ பா. செல்வசேனக் குருக்கள், கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் வ .சி.குணசீலன் என பலர் நடைபவனியில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவ ஆசிரியர்களும் நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நடைபவனியின் போது ஆசிரியர்கள் ஞான விளக்குகள் என்பதனை சித்திரிக்கும் வகையில் மிகப்பெரிய விளக்கு ஒன்று வடிவமைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.