நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான சிறார்களுக்கு 8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை காலி கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மேலும் அதிகரிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளின் அத்தியாவசிய நிர்மாணப் பணிகளுக்கு அதிக பணம் ஒதுக்கப்படும் எனவும், இதன் கீழ் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து அத்தியாவசியமான நிர்மாணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.