பதினாறு வயது சிறுமிகள் இருவர் மாயம்!

கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி பௌத்த மடத்தில் கல்விகற்ற பதினான்கு மற்றும் பதினைந்து வயதுடைய பிக்குகள் இருவர், பிபில பிரதேசத்தில் உள்ள பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பதினாறு வயது சிறுமிகள் இருவர், கடந்த 3ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு சிறுமிகளும் பிபில பிரதேசதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் வகுப்பில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸில் முறைப்பாடு
மாணவிகள் இருவரும் பாடசாலையில் இருந்து புத்தகப் பைகளுடன் வெளியேறியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் அவர்கள் பெண்கள் இல்லத்திற்கு வராததால், பாதுகாவலர் பிபில பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெலிமடை, அம்பேகமுவ பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் காணாமல் போயுள்ளதக மாணவியின் பெற்றோர் ஊவா பரணகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், பியகம, பேராதனை வீதியைச் சேர்ந்த 23 வயதான ஹோட்டல் தொழிலாளி, கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கந்தளாயையை சேர்ந்த 63 வயதுடைய நபர் மற்றும் எரகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர், யாழ்ப்பாணம் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் இந்த காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor