வாழைப்பழத்தை இந்த உணவோடு மட்டும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம்!

மிகவும் பயனுள்ள பழத்தில் வாழைப்பழமும் ஒன்றாகும். இதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கற்பூரவள்ளி, பூவன் பழம், செவ்வாழை, ரஸ்தாளி, பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், ஏலக்கி போன்ற பல வகைகளில் வாழைப்பழம் கிடைக்கிறது.

ஒரு பழுத்த வாழைப்பழத்தில் இன்றியமையாத பொட்டாஷியம் சத்து நிறைந்துள்ளது.

எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் வாழைப்பழத்தில் உள்ளது.

வாழைப்பழம் வயிற்றுக்கு புரோபயாடிக் போல் செயல்படுகிறது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

இதன் மூலம் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற ஆற்றல் கிடைக்கும்.

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

வாழை மற்றும் சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் அமிலம் நிறைந்த புளிப்புப் பழங்களுடன் வாழைப் பழத்தை உட்கொள்ளக் கூடாது.

இது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையின் அளவை அதிகரிக்கும்.

இதனால் வயிற்று வலி, அசிடிட்டி, தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வாழை மற்றும் தண்ணீர்

வாழைப்பழம் சாப்பிடும் போதோ அல்லது வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயோ தண்ணீர் குடிக்கக் கூடாது.

வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் சளி, இருமல் ஏற்படும்.

கூடுதலாக வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாழைப்பழம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் முட்டை

வாழைப்பழம் மற்றும் முட்டையை ஒன்றாக சாப்பிடக் கூடாது.

வாழைப்பழத்தின் தன்மை குளிர்ச்சியாகவும், முட்டையின் தன்மை சூடாகவும் உள்ள நிலையில் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

கப தோஷமும் உடலில் அதிகரிக்கலாம்.

வாழைப்பழம் மற்றும் தயிர்

வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.

இது உடலுக்கு ஒரு மோசமான உணவு கலவையாகும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

வாழைப்பழம் சாப்பிட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து தான் தயிர் சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் பால்

பெரும்பாலானோருக்கு பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிம் பழக்கம் உள்ளது.

ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை .

வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் நச்சுகள் உருவாகும்.

இதன் காரணமாக வயிற்று வலி மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Recommended For You

About the Author: webeditor