மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், லீற்றர் ஒன்றுக்கு 253 ரூபா அதிகரிக்கப்பட்டதன் பின்னர், அதே விலை மீன்களுக்கும் சேர்க்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மீனின் விலை 5000 ரூபாவைத் தாண்டும்
ஒரு கிலோ மீனின் விலை 5000 ரூபாவைத் தாண்டும் என பேலியகொட மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விலை நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மண்ணெண்ணெயில் வேலை செய்பவர்களுக்கும் விலை நிவாரணம் வழங்கப்படும் என்றார்.