இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகம் முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், இனங்கள், மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.