நொச்சியாகம மகாவலி அதிகார சபையின் பதில் முகாமையாளர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
75,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார்.
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியை ஒருவருக்கு மாற்றுவதற்காக இந்தத் தொகையை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.