பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் அறிமுகமாகும் டிஜிட்டல் அட்டை

பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (04.09.223) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிக செலவுகள், ஊழியர்களின் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து சேவைகள் நட்டத்தை சந்தித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடருந்து திணைக்களம்
அதிக செலவுகளாலும், பல்வேறு மோசடிகளாலும், ஊழல்களாலும் தொடருந்து திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை நீண்டகால நட்டத்தை சந்தித்து வருகின்றன.

சாரதிகளும் நடத்துனர்களும் திருடுகிறார்கள் என்று சொல்லவில்லை. வருமானத்தில் ஒரு பகுதி டிப்போவுக்கும், ஒரு பகுதி வீட்டிற்கும் செல்கிறது.

அதிக இலாபம்
நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளில் அதிக இலாபம். சில நாட்களில் அந்த வருமானம் குறைந்தது.

மோசடி மற்றும் ஊழலை ஒழிக்க டிஜிட்டல் மயமாக்க வேண்டும். அதற்காக அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor