பிரான்ஸ் ஜனாதிபதி அபாயா உடை தொடர்பில் கருத்து

இன்று புதிய கல்வி ஆண்டு ஆரம்பமான நிலையில், பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், ‘பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு அனுமதி இல்லை!” என தெரிவித்தார். “கல்வி நிலையங்களை, சமமாக நடத்தவும், ஜனநாயகத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளவும் நான் ஆதரவாக உள்ளேன்.

அதேவேளை, யாரையும் களங்கப்படுத்துவது நோக்கமல்ல!” எனவும் அவர் தெரிவித்தார். பாடசாலை வளாகம் சமமான ஒரு இடமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளும் பிரிவுகளை உணரக்கூட்டாது.

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நாம் கட்டாயமாக இது தொடர்பாக புரிதல் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

#France #yarlvasal #President #ஜனாதிபதி #பிரான்ஸ்

 

Recommended For You

About the Author: admin