வெளிநாட்டு ஆசையால் யாழ் நபருக்கு நிகழ்ந்த சம்பவம்

யாழ் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் சந்தேக நபரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நாட்டைவிட்டு வெளியேற தடை
குறித்த நபருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றியதினம் , செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடக இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமானத்துக்குச் செல்வதற்காக, ​​விமான நிலைய குடியகல்வு கருமபீடங்களில் அதிகாரிகள் இல்லாத கருமபீடத்தின் ஊடாக நுழைந்துள்ளார்.

காட்டிக்கொடுத்த அவுஸ்திரேலிய பெண்
இந்நிலையில் அவரது செயலை அவதானித்த, அவுஸ்திரேலிய பெண்ணொருவர் அது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குடிவரவு அதிகாரிகள் நபரை தேடியபோது சந்தேகநபர் விமானத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாரிகள் தலைமை குடியேற்ற அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு கமெரா அமைப்பைப் பார்த்து, அவரது விமான உரிமம் மற்றும் விமான டிக்கெட்டை கணினி அமைப்பு மூலம் பெற்று சரிபார்த்தபோது, ​​அவருக்கு எதிராக இரண்டு நீதிமன்றங்களால் விமான தடை விதிக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த நபர் தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டபோதும் , விமானம் இலங்கை வான்பரப்பிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து விட்டது.

மும்பைக்கு பறந்த தகவல்
அதன் பின்னர், சந்தேகநபர் தொடர்பில் மும்பை விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கபபட்டது.

இதனையடுத்து யாழ் நபரை மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானத்தின் ஊடாக அழைத்து வந்து கட்டுநாயக்க குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேவேளை சந்தேகநபர் விமான நிலைய குடியகல்வு கருமபீடத்துக்கு வரவில்லை என்றாலும், அவரது கடவுச்சீட்டில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முத்திரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

கைதான நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Recommended For You

About the Author: webeditor