கொழும்பு மாவட்டத்தில் , காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை பலிகொண்ட ‘மெனிங்கோகோகல்’ (meningococcal bacteremia) என்ற பக்றீரியா தொற்றுக்குள்ளான நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் குறித்த நோயாளி இரத்மலானை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரிய வந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் காய்ச்சல் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் பணிபுரிந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.