யாழ்ப்பாணம் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான jolly legends league இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 27.08.2023ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் வி. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சாந்திரட்ணம் ஜெயபிரகாஸ் மற்றும் துரைராஜா பிரபாகரன் (சுல்தான்) ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் ஸ்ரான்லி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து YMHA விளையாட்டு கழகம் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய YMHA அணி 20 ஓவர்களில் 217 ஓட்டங்களை பெற்றது. இதில் அருள்ராஜ் 110 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி அணி 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 68 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக YMHA வீரர் அருள்ராஜ்ஜூம் ஆட்ட தொடர் நாயகனாக சென்றலைட்ஸ் அணி வீரர் சாயிதர்சனும் தெரிவாகினர்.
இறுதிப் போட்டியில் பசுமைப் புரட்சியை நோக்காகக் கொண்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டு கழகத்தால் யாழ் இந்துக் கல்லூரிக்கு துடுப்பு மட்டையும் ஸ்கோர் போர்ட்டும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.