திருமண தடைகள் விலக வாழை வழிபாடு

வாழை மரத்தை பெண்கள் தான் அதிகமாக வழிபடுவார்கள். வாழை மரத்தை தொடர்ந்த வழிபடுவதால் திருமண தடைகள் விலகும்.

குழந்தை பாக்கியம், பணப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வாழை மர வழிபாடு மிகவும் சிறந்ததாகும்.

தம்பதியராக சேர்ந்து வாழை கன்று, வாழை பழம் ஆகியவற்றை தானமாக கொடுப்பது நல்ல பலனை தரும்.

இந்து வழிபாட்டு முறைகளின் படி மரங்கள், செடிகள் ஆகியவற்றை தெய்வத்தின் அம்சமாக கருதி வழிபடும் முறை பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது.

புண்ணிய பலன்களை தரும் விருட்சம்

துளசி, அரச மரம், வேப்ப மரம், மாமரம், அசோக மரம், வில்வ மரம் உள்ளிட்ட மரங்கள் அதிக புண்ணிய பலன்களை தரும் விருட்சங்களாகும்.

இவற்றில் ஒவ்வொரு மரமும் ஒரு தெய்வத்திற்குரியதாகவும், ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகவும் கருதப்படுகின்றன.

இந்த மரங்கள் வழிபடப்படுவதுடன், இவற்றின் இலைகளும் அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த புண்ணிய விருட்சங்களின் இலைகளைக் கொண்டு தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

அதே போல் பெண்கள் பலரும் வாழை மரங்களை வழிபடும் வழக்கம் உள்ளது.

மங்கல நிகழ்வுகளுக்கு

திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்வுகளுக்கு வாழை மரத்தை வாசலில் கட்டுவதும், தோஷ பரிகாரங்களுக்கும் வாழையை பயன்படுத்துவதும் தமிழர்கள் கடைபிடிக்கப்படும் வழக்கமாகும்.

வாழை மரம் பிரகஸ்பதியின் அம்சமாகவும், மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் வடிவமாகவும் கருதப்படுகிறது.

வாழை மரத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வதாக கருதப்படுகிறது. பெண்கள் வாழை மரத்தை வழிபட்டால் வியாழக்கிழமையில் வழிபட்டால் தங்களின் விருப்பம் போல் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பது நம்பிக்கை.

வாழை மரம் அதிரஷ்டம் தரும் மரமாக பார்க்கப்படுதால் இதனை தொடர்ந்த வழிபடுவதால் செல்வம் சேரும்.

வாழை மரத்தை வழிபடும் முறை

ஒரு கலசத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் கலந்து வாழை மரத்திற்கு ஊற்றி வரலாம்.

வாழை மரத்தடியில் மஞ்சளில் ஸ்வஸ்திக் வரைந்து சிறிதளவு சுண்டல், இனிப்பு, இரண்டு வாழை பழங்கள் வைத்து அதோடு தட்சணை வைத்து விளக்கேற்றி வழிபடவேண்டும். பிறகு அதற்கு தூப, தீப ஆராதனை காட்டி தொடர்ந்து வழிபட்டு வரலாம்.

“ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரெளம் ஸஹ் குரவே நமஹ” என்ற பிரகஸ்பதிக்கு உரிய மந்திரத்தை தினமும் வாழை மரத்திற்கு அருகில் இருந்து உச்சரித்து குருவின் அருளை பெறுவதற்கு வேண்டிக் கொள்ளலாம்.

இவை அனைத்தையும் நிறைவு செய்த பிறகு வாழை மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

வாழை மரத்தில் சிவப்பு கயிறு ஒன்றை கட்டி, நம்முடைய வேண்டுதலை சொல்லி வணங்க வேண்டும்.

Recommended For You

About the Author: webeditor