உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்

பழங்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்பட்டாலும் அவற்றில் சில பழங்கள் அதிக இனிப்பு அல்லது அதிக கலோரி எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.

இதனால்தான் ஒரு சில பழங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோரின் டயட்திறம்பட உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளின் பட்டியலில் சிலவற்றை சேர்க்கவில்லை.

உடல் எடையைக் குறைக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளிலும் முயற்சிகளிலும் அதிகம் ஈடுபட வேண்டும்.

அதற்கு மிக முக்கியமாக ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உள்ள கலோரிகளின் அளவையும் அவ்வப்போது கணக்கிட வேண்டும்.

தினசரி உணவில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுமாறு பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முழு தானியங்கள், கொழுப்பு குறைவாக இருக்கும் இறைச்சிகள், பருப்புகள், விதைகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது.

அவகாடோ

அதிகம் கொழுப்பு மற்றும் இனிப்பு நிறைந்த பழங்களுள் அவகாடோ பழமும் ஒன்று. 100 கிராம் அவகாடோவில் 150 கிராம் வரை கொழுப்பு கலந்துள்ளதாம்.

இருப்பினும் இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் இந்த பழத்தை தேர்வு செய்கின்றனர்.

இப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம். முழுமையாக இதனை உணவு பட்டியலில் இருந்து தவிர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவ்வப்போது குறைவான அளவில் இந்த பழத்தினை உட்கொள்ளலாம்.

தேங்காய்

தேங்காய் வகைகளில் இருந்தது உற்பத்தி ஆகும் பல பொருட்கள் உடலுக்கு நன்மை விளைவிப்பதாகவே உள்ளன.

ஆனாலும் இதை அதிக அளவில் உட்கொண்டால் உடலில் கொழுப்பு சேரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதில் இனிப்பு அதிகம் கலந்துள்ளதும் கொழுப்பு உடலில் கொழுப்பு சேர ஒரு காரணமாக கருதப்படுகிறது.

உலர் பழங்கள்

உலர் பழ மற்றும் நட்ஸ் வகைகள் ஆரோக்கியத்தை பேண வழிவகை செய்யும். பழ வகைகளில் நீர்ச்சது நிரம்பி இருக்கிறது என்றால் உலர் பழங்களில் அப்படியே நேர்மாறாக இருக்கும்.

இதனால் அதில் சாதாரண பழங்களில் இருப்பதை விட கொழுப்பின் அளவு சிறிது அதிகமாகவே இருக்கும்.

ஒரு கிராம் உலர் திராட்சையில் 150 கலோரிகளுக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் எடை குறைப்பில் டயட் இருக்கும் போது உலர் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவை குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும்.

வாழைப் பழம்

வாழைப்பழத்தில் ஃபைபர் சத்துகள் நிறைந்துள்ளது என்பதும் சாப்பிட்டவற்றை ஜீரணிக்க செய்யும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், ஒது உடல் எடையை அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத தகவல். ஒரு வாழைப்பழத்தில் 37.5 கிராம் அளவுக்கு கார்போ ஹைட்ரேட் நிறைந்து உள்ளதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 3-4 வாழைப்பழங்களை சாப்பிடுபவராக இருந்தால் அது உடல் எடையை கூட்டுமே தவிற குறைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஹெல்தி ஸ்நாக்ஸ் வகைகளில் அடங்கும் வாழைப்பழத்தை தினமும் ஒன்று என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழம்

வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களான மாம்பழம் மற்றும் அன்னாசியில் கண்ணுக்கு தெரியாமல் கொழுப்புகள் அடங்கியுள்ளன.

இவை அதிக இனிப்பு வகையை சேர்ந்த பழங்கள் என்பதால் குறைந்த எடையையும் இன்னும் அதிகரிக்க வழி வகுத்துவிடும் என எச்சரிக்கின்றனர்

ஒன்று இரண்டு துண்டுகள் எந்த பாதகமும் விளைவிக்காது என்றாலும் இதை அதிகளவில் உட்கொள்வது உடலுக்கு கேடு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor