கனடாவில் எரிபொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்டையும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் பெற்றோலின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அநேகமான பகுதிகளில் பெற்றோலின் விலை உயர்வடைந்திருந்தது.
நேற்றைய தினம் சராசரியாக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 169.3 டொலர் எனவும் ஒரு வாரத்திற்கு முன்னதாக சராசரி விலை 163.9 டொலர் எனவும் பதிவாகியுள்ளது.
கனடிய ஒட்டோமொபைல் ஒன்றியத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகபட்சமாக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 192.8 டொலர் பதிவாகியுள்ளது.
குறைந்த விலையாக அல்பர்ட்டாவில் ஒரு லீற்றர் பெற்றோல் 146.4 டொலராக பதிவாகியுள்ளது.
இந்தக் கோடை காலம் முழுவதிலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குளிர்காலத்தில் விலைகள் குறையும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.