இந்து மக்களின் புனித நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் தமது முன்னோர்களுக்கான பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
முன்னோர்கள் வழிபாடு
குடாநாட்டின் பல்வேறு பிரதேசன்களிலும் உள்ள மக்கள் இறந்த தமது முன்னோர்களுக்கான வழிபாடுகளை நிறைவேற்ற கீரிமை தீர்த்தத்தை நாடி வந்திருந்தனர்.
யாழ். கீரிமலை கடலில் ஆடி அமாவாசை பிதிர்க்கடன் வழிபாடுகள் காலமாக கடைப்பிடிக்கபப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது