கடந்த சில மாதங்களாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 30 டொலர்
அதாவது சிகிரியாவை பார்வையிட உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் 100 ரூபாவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 9810 ரூபாவும் (30 டொலர்) அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகரித்த கட்டணம் அறவிடப்படுகின்றமைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.