இளநீர் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதோடு தினமும் இளநீர் குடிப்பது பல நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் காணப்படும் சத்துக்கள் உடலில் உள்ள “எலக்ட்ரோலைட்” டுகளின் சமநிலையை நிலைநிறுத்தி, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.பொதுவாக இளநீர் மழைக்காலங்களில் முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது
முடியை நீரேற்றமாக வைத்திருக்க இளநீரால் தலையை அலசுவது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் இளநீர் எண்ணெய் தடவாமல் கூட முடிக்கு பயன்படுத்தலாம் இவை முடிக்கு ஊட்டமளிக்க உதவும். மேலும் இளநீரால் தலையை அலசுவதால், கூந்தல் பளபளப்பாகவும், செட்டில் ஆகவும் செய்கிறது, இது மட்டுமின்றி, இளநீர் உச்சந்தலையில் ஈரப்பதத்துடன் வைத்து இருக்கவும் உதவுகிறது.
முடி உதிர்வதைத் தடுக்க உதவுவதுடன் இளநீரைப் பயன்படுத்துவதால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மேலும் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. இதனை கூந்தலில் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு வலிமையும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, தினமும் இளநீரில் தலையை அலசினால், முடி வெடிப்பு பிரச்சனையும் குறைகிறது.
இளநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலைமுடியில் பொடுகு வராமல் தடுக்க உதவுகிறது.
அந்தவகையில் இளநீரை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடிக்கு ஊட்டமளிக்கிறது, அத்துடன் இது பொடுகு பிரச்சனையை நீக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.