கிழக்கு ஆசியா நாடான மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது.
மங்கோலியாவில் மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது.
அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு மங்கோலியாவின் சவ்கான் மாகாணத்தில் ஏராளமான மர்மோத்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதனால் சில மர்மோத்களின் மாதிரியை எடுத்து நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு அவை இறந்தது தெரியவந்தது. அங்குள்ள 17 மாகாணங்களில் இது பரவியுள்ளது.
பிளேக் நோய்க்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழப்பு ஏற்படும். எனவே அங்கு மர்மோத்களின் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.