பிரித்தானியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, 2024 முதல் ஒரு புதிய விதிமுறை ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், இனி முன்போல் அந்த நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

புதிய நடைமுறை
அதாவது, 2024 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், The European Travel Information and Authorisation System (ETIAS) என்னும் பயண அனுமதி ஒன்றை பெறவேண்டும்.

இந்த அனுமதி ஆவணத்திற்கான கட்டணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 பவுண்டுகள் ஆகும்.

இந்த அனுமதி பெறாதவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இந்த அனுமதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor