உலகில் ஆண்டுதோறும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்ப டுவோர்எண்ணிக்கை பெருகி வருகிறது. உலக அளவில் புகை யிலை பயன்பாட்டினால் பன்னிரண்டில் ஒருவர் உயிரிழக்கின்றனர்.
இதனால்60 லடசத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோய் இறப்புகள் புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் புகையிலை பயன்பாட்டை குறைத்து புகையிலை இல்லாத புதுச்சேரியை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ப்ராவிடென்ஸ் வணிக வளாகத்தை புகையிலை பயன்பாடு இல்லாத வணிக வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவ்வளாகத்திற்கு வரும் பொதுமக்கள், வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் புகையிலை பொருட்களை வளாகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டாக்டர் வெங்கடேஷ், மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் ப்ரொவிடென்ஸ் மால் நிர்வாக இயக்குனர் பிரேம்ராஜாவிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் டாக்டர் சூரியகுமார், மாநில ஆலோசகர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.