கொழும்புத்துறையில் 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அறுபது மாணவர்களுக்கு, மாணவர் ஒருவருக்கு 1,100 ரூபா  பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  அறுபது பேருக்கும் மொத்தம் அறுபத்தி ஆறாயிரம்(66000.00)ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில், அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான, அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர் சா.தவசங்கரி ஆகியோர் 06-07-3023 அன்று வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வானது,பாடசாலையின் அதிபர் க.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ந.லிங்கேஸ்வரன், ஆசிரியர்களான,திரு ஜோன் கியூபேட்,திரு சிவநந்தவர்மன்,திருமதி மதனகோபன்,திருமதி நியூட்டன் உட்பட மாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்து,கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN