புதிய ஆன்லைன் கடவுச் சீட்டு முறைமையை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றது.

குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முறைமை குறித்து பேசிய அமைச்சர் அலஸ், மூன்று நாட்களுக்குள் புதிய கடவுச்சீட்டுகள் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, கடவுச்சீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை வழமை போன்று இயங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor