யாழில் மலையக மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

”மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்” என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (20.05.2023) யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மலையக மக்களின் இருநூறாவது ஆண்டை நோக்கி சர்வமத வழிபாடுகளும், மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தியே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மலையக மக்களின் சுதந்திரம்
இதேவேளை “மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” , மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணிக்கொடு” தோட்டா வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்” , வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி”, போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor