திருகோணமலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிகை!

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 600 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது திருகோணமலை நகரத்தை அண்டிய பகுதிகளில் 325 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டெங்கு நோயின் தாக்கம் காரணமாக உப்புவெளிப் பிரதேசத்தில் 6 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயின் தாக்கமானது திருகோணமலை நகரப்பகுதி, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor