இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று முன்னெடுக்கப்படும் பொது முடக்கம் காரணமாக வாழைச்சேனையில் வர்த்தக நிலையங்கள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஓரணியாக விடுக்கப்பட்ட பொது முடக்க அழைப்புக்கு வடக்கு – கிழக்கை பிரதான தளமாகக் கொண்டு செயற்படும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
வாழைச்சேனையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடிக் காணப்பட்டதுடன், மீன் சந்தை, மரக்கறி, பழக்கடைகள் திறந்து காணப்பட்டது.
அத்தோடு அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்குவதையும், தனியார் வங்கிகள் சில மூடிக் காணப்படுவதையும் காண முடித்தது.
தமிழ் பகுதியிலுள்ள பாடசாலைகள் இயங்கினாலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதுடன், போக்குவரத்துக்குகள் வழமை போன்று இயங்குகின்றது.
வாழைச்சேனை பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள் பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.