சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 03 (விறன்மிண்ட நாயனார் ) ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் கோவில் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 28.04.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.
சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் “தொண்டர்களை முன்னர் வணங்கி பின்பு இறைவனை வணங்கும் நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.