செவ்வாழையில் அடங்கியிருக்கும் நன்மைகள்

ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழத்தையும் தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பசியில் இருப்பவர்கள் இதனை ஒன்று எடுத்துக் கொண்டால் கூட போதும் வயிறு நிரம்புவதோடு இல்லாமல் உடல் வலிமையும் பெரும்.

அதனால் தான் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் எப்போதும் வாழைப்பழத்தை அவர்களின் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வார்கள்.

இப்படி பல்வேறு வித நன்மைகள் தருகிற வாழைப்பழத்தில் செவ்வாழை, மலை வாழைப்பழம், கற்பூர வள்ளி, பூவாழை, ரஸ்தாளி, நாட்டு வாழைப்பழம் என்று இதன் வகைகள் நீண்டு கொண்டே செல்லும்.

அந்த வகையில் செவ்வாழை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

எடையைக் குறைக்கும்

பொதுவாக எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகையால் உடல் எடையை குறியாக எண்ணுபவர்கள் இந்த செவ்வாழையை தினமும் சாப்பிடலாம்.

இதனை சாப்பிடுவதால் வயிரு நிறைந்து இருப்பதால் பசி எடுக்காது அதே நேரத்தில் உடல் வலிமையுடன் இருக்கும்.

சிறுநீரக கற்களைத் தடுக்கும்

செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்கும். அதோடு இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

தவிர உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க செய்து எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

இரத்த அளவை அதிகரிக்கும்

உடலில் ஹீமோகுளோபினின் அளவு குறித்து காணப்படும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

செவ்வாழையில் காணப்படும் அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிப்பதால் உடலுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

உடலின் சக்தி அதிகரிக்கும்

செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.

செவ்வாழையில் இருக்கும் இயற்கை சர்க்கரை, ஆற்றலாக மாறி உடல் களைப்பை /சோர்வை தடுத்து உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது.

ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல்

சாப்பிட்டவுடன் பலருக்கும் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதில் இயற்கையாக இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நெஞ்செரிச்சலை தடுக்கிறது.

Recommended For You

About the Author: webeditor