காபியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகள்

காபியை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிகமாக காபி குடிப்பதால் நம் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படுமாம். அந்தவகையில்,

என்னென்ன பாதிப்பு
அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிகமாக காபி அருந்துவதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
காபியுடன் சுவைக்காக கெட்டியான கிரீம், சூடான சாக்லேட் போன்றவற்றை சேர்த்து கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும்
உங்கள் காபியில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பது , கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
படுக்கைக்கு முன் காபி குடிக்க வேண்டாம். இது ஒற்றைத் தலைவலி, சோகம், பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும்.

Recommended For You

About the Author: webeditor