சந்தையில் மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சநதையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன.
அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும் சந்தையில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையில், கட்டாயமாக மாபிள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.