ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

மனித உரிமைகள் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான இறுதி அறிக்கையை பூர்த்தி செய்வதற்காகவே ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து, விசாரித்து அறிக்கை அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜனவரி 21 ஆம் திகதி ஆணைக்குழுவை நியமித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆணைக்குழுவின் தலைவராகவுள்ளார்.

ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin