குழந்தைகளோடு கூடிக்களிப்பது தான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பது போய், குழந்தைகளை விட்டு ஒரு மணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள். அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் பார்த்து பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம் வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகளால் இன்னும் பெரிய பிரச்சனைகள்.
குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார் செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான்.
தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.