வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் வாட்ஸ்அப்-இல் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழித்துக் கொள்ளும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்த வரிசையில், வாட்ஸ்அப் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தனது செயலியில் வழங்க இருக்கிறது. இவற்றை கொண்டு ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ மறைத்து வைப்பது, வாட்ஸ்அப் க்ரூப்களை விட்டு சத்தமின்றி வெளியேறுவது, உரையாடல்களில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது என ஏராள வசதிகளை பெற முடியும்.
“வாட்ஸ்அப்-க்கு புதிய பிரைவசி அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. யாருக்கும் தெரியப்படுத்தாமல் க்ரூப் சாட்களில் இருந்து வெளியேறலாம், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்வது, வியூ ஒன்ஸ் மெசேஜ்கள் மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தவிர்க்கலாம்.
உங்கள் குறுந்தகவல்களை பாதுகாத்து, தனியுரிமையை வழங்க தொடர்ந்து புது வழிகளை உருவாக்குவோம்,” என மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.